குஸ்வாஹா குட்டை உடைத்ததே இளைஞர் காங். தான்: ராகுல் காந்தி
கோரக்பூர்: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் குஸ்வாஹாவின் குட்டை உடைத்ததே இளைஞர் காங்கிரஸார் தான் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கூறியதாவது,
ஊழல் புகாரில் சிக்கிய குஸ்வாஹாவை உத்தர பிரதேச மாநில முதல்வர் மாயாவதி பதவி நீக்கம் செய்தார். ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி வரும் பாஜக அவரை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது.
தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் குஷ்வாஹா ஊழல் செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தே இளைஞர் காங்கிரஸார் தான்.
பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் குஸ்வாஹா நேராக எங்களிடம் தான் வந்தார். தன்னை காங்கிரஸுடன் இணைத்துக் கொள்ள விரும்புவதாகவும், வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் தெரிவித்தார். ஆனால் நாங்கள் அவரை கட்சியில் சேர்க்க மறுத்துவிட்டோம். ஊழல் செய்த உங்களை காப்பாற்ற மாட்டோம், நிச்சயம் சிறைக்கு அனுப்புவோம் என்று தெரிவித்து அனுப்பி விட்டோம் என்றார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications