மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸுக்கு தலைவலியாக உருவெடுக்கும் பவார்
மும்பை: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியை அடுத்து தற்போது காங்கிரஸுக்கு தலைவலியாக மாறியிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய உணவுத் துறை அமைச்சருமான சரத் பவார்.
மும்பையில் மாநகராட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. இதில் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது. தற்போது மும்பை மாநகராட்சி சிவ சேனா மற்றும் பாஜக வசம் உள்ளது. இதைக் கைப்பற்ற காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் மும்முரமாக உள்ளன.
இந்நிலையில் வரும் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூடி இன்று இறுதி முடிவு எடுக்க விருப்பதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவார் பேசியதாவது, கடந்த முறை கடைசி நேரம் வரை எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. அதனால் இந்த முறை கூட்டணி குறித்து நாளை (நேற்று) மாலைக்குள் காங்கிரஸ் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தான் சவான் கூட்டணி குறித்து இன்று(10ம் தேதி) இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே கூறுகையில், நாங்கள் பவார் சகாபை மதிக்கிறோம். ஆனால் அவர் தனது கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும். கூட்டணி தேவையில்லை என்றால் அவரவர் வழியைப் பார்த்து போகலாம் என்றார். இதனால் கூட்டணி வருமா, இல்லையா என்பதில் இழுபறி நிலவுகிறது.
தேசியவாத காங்கிரஸ் 65 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. ஆனால் அதற்கு 30 இடங்கள் மட்டுமே தர காங்கிரஸ் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications