சென்னை விமான நிலையத்தில் தீ- பேராபத்து தவிர்ப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை தீடீர் என்று தீப்பிடித்தது. ஆனால் அது உடனே அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடத்தில் இன்று காலை திடீர் என்று தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு மற்றும் மீ்ட்புபணித் துறை ஊழியர்கள் தீயை அணைத்தனர். அதனால் தீ எங்கும் பராவமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை. மின்கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் 10 பிரபல ஏர்லைன் நிறுவனங்களின் அலுவலகங்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications