தமிழக அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்-நாளை ஜெ தொடங்கி வைக்கிறார்

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா நிறுத்தினார். அதற்குப் பதிலாக விரிவான இன்னொரு காப்பீட்டுத் திட்டம் அமலாக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி 1 கோடியே 34 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை நாளை அவர் துவக்கி வைக்கிறார்.
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவர். 1,016 சிகிச்சைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்க இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு, "முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நாளை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளுக்கான கட்டணம் மற்றும் இதர செலவீனங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் அடங்கும்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த காப்பீட்டுத் திட்டம் செல்லும்.
இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கும், மற்ற விவரங்களை அறிவதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இதற்கென தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டணமில்லாத 24 மணி நேர தொலைபேசி சேவை எண்ணான 18004253993 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களை www.cmchistn.com என்ற இணையத்தளத்தில் அறியலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications