கரூரில் நூதன முறையில் பச்சிளம் குழந்தை கடத்தல்: சில மணி நேரத்தில் மீட்ட போலீசார்
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்ணின் கைக் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகமலை கிருஷ்ணாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சுமதி. அவர்களுக்கு பிறந்து 35 நாளே ஆன ஆண் குழந்தை மதுரை வீரன்.
தங்களது குடும்பம் வறுமையில் வாடுவதால் இலவச பட்டா கேட்டு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முருகனும், சுமதியும் தங்களது கைக்குழந்தையுடன் வந்தனர்.
அப்போது அவர்களை அணுகிய சில பெண்கள், பச்சிளம் குழந்தைத் திட்டத்தின் பேரில் கைக்குழந்தைக்கு ரூ.20,000 வரை நிதி கொடுக்கின்றனர். அதை நாங்கள் வாங்கித் தருகிறோம் என கூறி முருகனிடம் ரூ. 700 கொடுத்தனர். மேலும், ரேஷன் கார்டு மற்றும் போட்டோ கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் முருகன் ரேஷன் கார்டை எடுத்து வர வீட்டுக்கு சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுமதியை அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவரது கைக்குழந்தையை எடைபோட்டு கொண்டு வருவதாக கூறி வாங்கி சென்றவர்கள் பல மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, அருகிலுள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தார்.
உடனே குற்றவாளிகளை பிடிக்க கரூர் எஸ்.பி. நாகராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், சோமூர் சிவகாமி, அவரது தங்கை கலைச் செல்வி ஆகியோரை கைது செய்து குழந்தைய மீட்டனர். பின்பு மதுரைவீரனை கரூர் கலெக்டர் ஷோபனாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை பெற்றோரிடம் நேற்றிவு கலெக்டர் ஷோபனா ஒப்படைத்தார்.
போலீசார் அதிவேகத்தில் செயல்பட்டு குழந்தையை மீட்டதால் கரூர் எஸ்.பி. நாகராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications