மயிலை ஆட்டோ டிரைவர் திருவான்மியூரில் படுகொலை-போலீஸ் விசாரனை
சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் திருவான்மியூரில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவான்மியூர் காமராஜர் கிழக்கு 3-வது தெருவில் ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணி அளவில் வாலிபர் ஒருவர் ஆட்டோவில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார் என்று தெரியாமல் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவான்மியூர் போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி அப்பகுதி முழுவதும் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தது மயிலாப்பூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அரிகிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது. வாடகை ஆட்டோ ஓட்டி வரும் இவரை யாரோ அங்கிருந்து கடத்திச் செனறு கொலை செய்தது தெரியவந்தது.
கொலைக்கு காரணம் காதலா?
மயிலாப்பூரில் சிதம்பரசாமி கோவில் 3-வது தெருவில் வசித்து வந்த அரிகிருஷ்ணன் காய்த்ரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த பெண் திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் அவரது பெயரை ஆங்கிலத்தில் மார்பில் பச்சை குத்தியுள்ளார்.
காயத்ரியைப் பார்ப்பதற்காக அரிகிருஷ்ணன் அடிக்கடி திருவான்மியூர் பகுதிக்கு சென்று வந்துள்ளார். ஞாயிறன்றும் இதேபோல அங்கு சென்ற இடத்தில் அரிகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அவரது காதலியின் உறவினர்கள் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு திருவொற்றியூரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் அரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்துள்ளது. இதற்கு பழிக்குப்பழி வாங்கும் செயலில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications