வெள்ளை மாளிகையின் 'டெரர்' மிஷெல் ஒபாமா: ‘ தி ஒபாமாஸ்’ புத்தகத்தில் தகவல்!

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராக காட்சி அளிக்கிறார். அவரை மிகவும் மென்மையானவர் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால், அவர் எங்களுக்கு எல்லாம் டெரர்ஆக இருக்கின்றார் என்கின்றனர். இந்த தகவல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடி கன்டார் எழுதி வெளியாகவுள்ள ‘தி ஒபாமாஸ்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை பெற்று, ஏ.பி. நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. அதில், மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டி படைக்கிறார் என்றும், அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சில சம்பவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிகரிகளுடன் மோதல்
வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி இம்மானுவேல், அதிபரின் முன்னாள் ஆலோசகர் ராபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவ காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது, அதற்கு எதிர்ப்பான கருத்துகள் வெளியாயின.
அந்த திட்டக் கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை என்று இம்மானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால், மனம் நொந்த இம்மானுவேல் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், அதை ஒபாமா ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு சமயம், ‘அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை. வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும்’ என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.
ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது, அவரிடம் மிஷெல், ‘வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாரும் சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். இதனால், கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போல் பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார் நிருபர் கன்டார்.
மிகைப்படுத்தப்பட்ட செய்தி
இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்ட போது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந்நிலையில், புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சாதாரணமாக நடந்த விஷயங்களை மிகைப்படுத்தியும், கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார்’ என்று தெரிவித்தார்.
நம் ஊரில் இப்படி எழுதினால் அந்த புத்தகத்தை கொளுத்துவதோடு எழுதிய ஆளையும், ஆட்டோ அனுப்பி தூக்கி துவைத்துவிடுவாங்கள்ல... !
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications