For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'செகண்ட் ஹாண்ட்' ஜட்டி, பனியன், பிராவுக்கு ஜிம்பாப்பே தடை!

By Chakra
Google Oneindia Tamil News

Secondhand Underwear
ஹராரே: மிக ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்பே, 'செகண்ட் ஹாண்ட்' ஜட்டி, பனியன்கள், பிராக்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.

சுமார் 80 சதவீத வேலையின்மை நிலவும் இந்த நாட்டில் பழைய துணிகளை இறக்குமதி செய்து விற்பது மிக அதிகமாக உள்ளது. அதில், ஜட்டி, பனியனும் கூட அடக்கம்.

இந் நிலையில், செகண்ட் ஹாண்ட் உள்ளாடைகளை இறக்குமதி செய்வதை ஜிம்பாப்வே அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு ஜவுளித்துறையை ஊக்குவிக்கவும், நோய்கள் பரவுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் டென்டாய் பிடி தெரிவித்துள்ளார்.

இதையும் மீறி பழைய உள்ளாடைகளை யாராவது இறக்குமதி செய்தால், அதன் மீது 40 சதவீத வரியையும், 15 சதவீத வாட் வரியையும், ஒவ்வொரு கிலோ உடைக்கும் 3 டாலர் வீதம் அபராதமும் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே போன்ற தடையை இன்னொரு ஆப்பிரிக்க நாடான கானாவும் 1994ம் ஆண்டிலேயே அமல்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Zimbabwe may have an 80% unemployment rate, but one thing the country absolutely won't stand for is its impoverished citizens wearing used undergarments. According to the Zimbabwe Mail, the country's finance minister Tendai Biti recently announced a total ban on the importation and sale of secondhand underwear.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X