நக்கீரன் கோபாலை கைது செய்யக் கோரி மதுரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார்
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்திச் வெளியிட்ட நக்கீரன் வார இதழ் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் வார இதழில் அவதூறான செய்தி வெளிவந்ததாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும் இது குறித்து நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நக்கீரன் கோபால் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா மற்றும் அதிமுகவினர் புறநகர் மாவட்ட எஸ்.பி. அஸ்ராகார்க்கிடம் புகார் மனு கொடுத்தனர்.
இது குறித்து மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மக்களை பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் அயராது உழைத்து வரும் தமிழக முதல்வர் குறித்து தவறான, பொய்யான செய்தியை வெளியிட்டுள்ள மஞ்சள் பத்திரிகை நக்கீரன் வார இதழின் ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்து உள்ளோம். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி. புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார், என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications