தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை-டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலித் தலைவர் பசுபதி பாண்டியன் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்ரக எடுக்கவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மேலும், புதன்கிழமையன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் நகரில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தூத்துக்குடி நகரையே சூறையாடினர்.

நடவடிக்கை தேவை

இந்நிலையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். வன்முறையில் ஈடுபடுவது வருந்தத் தக்கது என்றும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+