மகாராஷ்டிரா முதல்வரின் ஊரில் தலித் பெண் நிர்வாணப்படுத்தி ஊர்வலம்: போலீசார் அலட்சியம்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் சொந்த ஊரான கராத் என்ற கிராமத்தில் உயர் ஜாதியைச் சேர்ந்த 5 பேர் 42 வயது தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கொண்டு சென்ற கொடுமை நடந்துள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானின் சொந்த ஊர் கராத். அங்கு கடந்த 9ம் தேதி மதியம் மூல்காவ் கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினர் 5 பேர் 42 வயது தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு உயர் ஜாதிப் பெண் ஒருவர் அந்த தலித் பெண்ணின் மகனுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உயர் ஜாதியினர் சதாரா மாவட்டத்தின் கராத் தாலுகாவில் வசித்து வந்த அந்த தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த தாய் கூறியதாவது,
எனக்கு நேர்ந்த கொடுமை பற்றி போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போன்று நடப்பதெல்லாம் சகஜம். அதற்காகவெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.
சில பெண்கள் என்னை தரையில் தள்ளிவிட்டனர். பிறகு எனது சேலையை உருவிவிட்டு என்னை செருப்பு மற்றும் கம்பால் அடித்தனர். எனது முடியைப் பிடித்து இழுத்தனர். இந்த கொடுமை சுமார் 2 மணிநேரம் நீடித்தது என்றார்.
இதனால் படுகாயம் அடைந்த அவரை தலித் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றதற்காக ஊரை விட்டு ஓடிய பெண்ணின் பெற்றோர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications