அமெரிக்காவில் 1,960 பேரை வீட்டுக்கு அனுப்பும் நோவார்டிஸ்
ஜெனிவா: ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் இந்த ஆண்டு அமெரிக்காவில் 1,960 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் நோவார்டிஸ் ஏஜி. உயர் ரத்த அழுத்தத்திற்காக அந்நிறுவனம் தயாரித்துள்ள 2 மருந்துகளின் விற்பனை மந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்நிறுவனம் அமெரிக்காவில் 1,960 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி விற்பனை பிரிவில் உள்ள 1,630 பேரும், அந்நிறுவனத்தின் அமெரிக்க தலைமையகமான நியூஜெர்சியில் 330 பேரும் நீக்கப்படுவார்கள்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான டியோவான் என்ற மருந்தின் காப்புரிமை காலம் முடிந்துவிட்டதாலும், இன்னொரு உயர் ரத்த அழுத்த மருந்தான டெக்டர்னாவின் ஆய்வு தோல்வி அடைந்துள்ளதால் இந்த பணிநீக்கம் அவசியம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவன அதிகாரி டேவிட் எப்ஸ்டீன் கூறியதாவது,
மருந்துப்பொருட்கள் பிரிவுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவாலான காலமாக இருக்கும். பணிநீக்கம் ஒரு இக்கட்டான முடிவு தான் என்றாலும் அது தேவையான ஒன்றும் கூட என்றார்.
இந்த பணிநீக்கத்தால் இந்த ஆண்டு முதல் 450 மில்லியன் டாலர் மிச்சப்படுத்த முடியும் என்கிறது அந்நிறுவனம். மேலும் சோதனை செய்யப்பட்ட மேலும் இரண்டு மருந்துகளையும் அந்நிறுவனம் கைவிட்டுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications