பீகாரைப் போன்று உபியிலும் சோனியா, ராகுல் மண்ணைக் கவ்வுவார்கள்: கட்காரி
டெல்லி: பீகார் தேர்தலைப் போன்று உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று பாஜக தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசததில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது,
ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் பீகார் சட்டசபை தேர்தலின்போது அங்கு பிரச்சாரம் செய்தனர். இருப்பினும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே போன்று தான் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும்.
முதல்வர் வேட்பாளருக்கு ராஜ்நாத் சிங், உமா பாரதி, சூர்ய பிரதாப் சாஹி மற்றும் கல்ராஜ் மிஷ்ரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் ராஜ்நாத் சிங் முதல்வராவதை விட தேசிய அரசியலில் தான் அதிக ஆர்வமாக உள்ளார். உமா பாரதி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.
-
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications