மூணாரில் கடுங்குளிர்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மூணாறு: மூணாறில் கடந்த 2 நாட்களாக கடுங்குளிராக உள்ளது. தடப்வெட்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஆண்டு (2011) நவம்பர் மாதம் குளிர் காலம் தொடங்கியது. கடந்த டிசம்பர் 27ம் தேதி தட்பவெப்பநிலை மைனஸ் டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. அப்போது கடும் பனிப்பொழிவும் இருந்தது. அதையடுத்து தட்பவெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மூணாறில் உள்ள எஸ்டேட்களில் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. இதனால் அங்கு கடும் பனிப் பொழிவு உள்ளது. பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும் குளிர் குறையவில்லை. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications