பசு கோமியத்தில் இருந்து ஆர்க் ஜூஸ்!: இது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி!!!
டேராடூன்: நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பசுவை வளர்க்க சிறப்பு திட்டங்கள் தீட்டப்படும். பசு சிறுநீரில் இருந்து 'ஆர்க்' என்ற ஜூஸ் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தர்கண்ட் மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் பாரதீய ஜனதா தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளரும், கட்சியின் தேசிய செயலாளருமான தவார்சந்த் கெலாட் டேராடூனில் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அதன் முக்கிய அம்சமே, பசுவின் கோமியத்தில் இருந்து மருந்து தயாரிக்கப்படும் என்பதுதான். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
புற்றுநோய் மருந்து
உத்தரகாண்டில் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் பசுக்களை அதிக அளவில் வளர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே பசு சிறுநீர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தப்படுகிறது. பசு சிறுநீரில் இருந்து காது, கண் நோய்களுக்கான மருந்து தயாரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பசு சிறுநீரில் இருந்து 'ஆர்க்' என்ற ஜூஸ் தயாரித்து அதை புற்று நோயாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications