தங்கையைக் கேலி செய்தவரைக் கொன்ற வழக்கு: கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் சரண்

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி: தனது தங்கையைக் கேலி செய்தவரைக் கொன்ற வழக்கில் கல்லூரி மாணவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருச்சி கீழஅம்பிகாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் முத்துகனி. இவர் அங்குள்ள கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். இவரது தங்கை கீர்த்தி. பிளஸ்டூ படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கீர்த்தியை 3 வாலிபர்கள் வழிமறித்து கிண்டல் செய்துள்ளனர்.

இது குறித்து கீர்த்தி தனது அண்ணன் முத்துகனியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் அந்த 3 வாலிபர்களிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முத்துக்கனியைத் தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து அந்த 3 பேரையும் தாக்கினார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து முத்துக்கனி அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார். இது குறித்து திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று கோவில்பட்டி ஜேஎம்2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+