பாஜகவால் வளம் பெறாத அயோத்தியைக் கைப்பற்றிய கிளம்பியுள்ள அரவாணி!

இவருக்கு ஆதரவாக அரவாணிகள் பட்டாளமே களத்தில் குதித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பிரபல கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடும் கிலியைக் கொடுப்பவராக பிந்து உருவெடுத்துள்ளதுதான் விசேஷமே.
போ்ட்டியிடுவது குறித்து பிந்து கூறுகையில் அயோத்தி ராமர் பிறந்த ஊர். நான் நேபாள நாட்டின் ஜனக்பூரைச் சேர்ந்தவள். அந்த ஊர் சீதை பிறந்த ஊராகும்.
எனக்கு இப்போது அயோத்திதான் வீடாகும். இந்த தொகுதியிலிருந்து இதுவரை வெற்றி பெற்ற எந்த ஆணுமே இந்த ஊருக்கு நல்லது செய்யவில்லை. பெண்களை போட்டியிடக் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. இதனால்தான் நான் இங்கு வந்து போராட முடிவு செய்து களத்தில் குதித்துள்ளேன் என்றார் பிந்து.
பிந்துவுக்கு துணையாக பிரசாரக் களத்தில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர் கின்னார் லட்சுமி நாராயணன். இவர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் சமீபத்தில் கலந்து கொண்டு பிரபலமானவர் என்பது நினைவிருக்கலாம். இவர்களுடன் மேலும் பல அரவாணிகளும் படை போல கிளம்பி அயோத்தி மற்றும் பைசாபாத் நகர்களை வலம் வந்து சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தி தொகுதி முழுவதிலும் இவர்களைப் பற்றிய பேச்சாகத்தான் உள்ளது.
அட்டகாசமான டிரஸ் மற்றும் உதடுகளை பளிச்செனக் காட்டும் லிப்ஸ்டிக் சகிதம் படு பிரகாசமாக இவர்கள் பிரசாரத்திற்குப் போகிறார்கள். இவர்களைப் பார்க்க பெரும் கூட்டமும் கூடுகிறது.
தனது பிரசார உத்தி குறித்து பிந்து மேலும் கூறுகையில், இதெல்லாம் சும்மா. இனிமேல்தான் நாங்கள் மிகத் தீவிரமான பல உத்திகளை கலம் இறக்கப் போகிறோம். பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் சிலரை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்கள் சில நாட்களில் இங்கு வரவுள்ளனர் என்றார் அதிரடியாக. யார் வரப் போகிறார்கள் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை.
இந்தத் தொகுதியை வழக்கமாக வெல்வது பாஜகதான். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொகுதியின் உறுப்பினராக பாஜகவின் லல்லு சிங்தான் உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் இவர் தொகுதிக்காக செய்த நல்ல விஷயங்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்கிறார்கள். அயோத்தியை வைத்து தேசிய அளவில் லைம்லைட்டுக்கு வந்த பாஜக, அயோத்தியை கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இத்தொகுதியில் சமாஜ்வாடி கட்சி, பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், அமைதிக் கட்சி என பல கட்சிகள் களத்தில் உள்ளன. ஆனால் பிந்துதான் இப்போதைக்கு இந்தத் தொகுதியின் டாப் ஸ்டார் வேட்பாளராக மாறியுள்ளார். இவர் வெற்றி பெற மாட்டார் என்றாலும் கூட குறைந்தது 15,000 ஓட்டுக்களையாவது பெறுவார் என்று கூறுகிறார்கள். உ.பி. அரசியலில் அதுவே பெரிய எண்ணிக்கை என்பதால் இவரது ஓட்டால் யாருக்கு வெற்றி பறி போகப் போகிறது, யாரைப் பாதிக்கப் போகிறார் பிந்து என்ற கேள்வி விறுவிறுப்பாகியுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications