'இந்து முன்னணி' ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம்-போலீஸ் கமிஷனரிடம் புகார்

இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் ஏ.டி.இளங்கோவன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 18ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்துக்கு தபால் மூலமாக ஒரு கவர் வந்தது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் பெயருக்கு அந்த கவர் கடிதம் வந்திருந்தது. அனுப்புனர் என்ற இடத்தில், சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணன் சாலையில் உள்ள ஒரு முகவரியுடன் அந்தக் கடிதம் வந்தது.
அந்த கவருக்குள் பால்பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது. அதில், ஆதார் தேசிய அடையாள அட்டை மூலம், உனது உயிருக்கு ஆபத்து நெருங்கி விட்டது. கூடிய சீக்கிரம், சென்னையில் மதக் கலவரம் வெடிக்கும், அப்போது நீயும், உன் ஜனத்தில் பலரும் சாவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்தி, கடிதம் எழுதிய சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷ்னர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications