அதிமுக மாணவர் அணி செயலாளர்கள் நியமனம் - ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக மாணவர் அணியின் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களை மாற்றி, அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பரங்கிமலை மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.எம்.சாந்தகுமார், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி நகரக் கழக துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ், திருப்பூர் புறநகர் மாவட்டம், பல்லடம் தொகுதிக் கழக இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் யு.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்டோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

வடசென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக அ.அப்பாசும், வடசென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக எம்.பாலாஜியும், தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக எஸ்.ஆர்.விஜயகுமாரும், தென்சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக எம்.ராமலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக ஜி.எம்.சாந்தகுமார், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணி செயலாளராக கே.பாலகுமார், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக அப்பு என்ற வி.வள்ளிநாயகம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக பொன்.ராஜா (பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), திருவள்ளூர் தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக எம்.டி.மைக்கேல்ராஜ், வேலூர் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக ஆர்.அன்பகம் திருப்பதி, திருப்பூர் புறநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக யு.எஸ்.பழனிச்சாமி, அரியலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக ஓ.பி.சங்கர், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக இளம்பை இரா.தமிழ்செல்வன், நெல்லை மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக கே.ஜெ.சி.ஜெரால்ட், நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக பி.எஸ்.அருள்ராஜ், நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளராக ஏ.கே.சீனிவாசன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+