சென்னையில் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர்
சென்னை: சென்னையில் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் உடல் சாலை கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரை அடுத்த கணேஷ் புதுநகரில் வசித்து வந்தவர் முனுசாமி(45). ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முத்தாலம்மன் கரிசைகுளம் கிராமத்தை சேர்ந்த இவர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த முருகேசனின் என்பவரது ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார்.
குடும்பத் தகராறு காரணமாக, இவரது மணிமேகலை 2 குழந்தைகளுடன், கடந்த 3 மாதங்களுக்கு முன் முனிசாமியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தனிமையில் வசித்து வந்த முனுசாமி, தினமும் இரவில் குடித்துவிட்டு கணேஷ் புதுநகர் பகுதியில் தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவு குடித்துவிட்டு வந்த முனுசாமி, வழக்கம் போல தகராறு செய்தார்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு முனுசாமியின் வீட்டின் அருகே உள்ள சாலையில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், பிரகாஷ், சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
முனுசாமியின் தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட மோப்ப நாய் 3 கி.மீ. தூரம் ஓடி நின்றது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications