எஸ்.எம். கிருஷ்ணாவின் கரூர் பயணம் ரத்து: எதிர்ப்பு காரணமா ?
கரூர் : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் கரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என்ற தகவல் வெளியானதை அடுத்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் அருகே உள்ள நெரூரில் புகழ் பெற்ற சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு பல ஆன்மீக பெரியோர்களும், பிரபல அரசியல் தலைவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சனிக்கிழமை காலை சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதிக்கு வந்து தரிசனம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கரூர் மாவட்டம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணாவின் வருகையை முன்னிட்டு திருச்சி போலீஸ் ஐ.ஜி.அலெக்சாண்டர் மோகன் கரூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆனால் திடீரென கரூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு எஸ்.எம். கிருஷ்ணா டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து இலங்கையிடம் வலியுறுத்தவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.
எனவே எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவர் கரூர் வராமல் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் வழக்கம்போல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications