மாருதி விற்பனை சரிவு... நிகரலாபம் பெரும் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil

டிசம்பரோடு முடிவடையும் காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ 205 கோடி. அதாவது இதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 63.6 சதவீத வீழ்ச்சி. கடந்த 3-ம் காலாண்டு லாபம் ரூ 565.17.
விற்பனையிலும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது மாருதி. 28 சதவீதம் அளவுக்கு கார் விற்பனை2 சரிந்துள்ளது. இதற்குக் காரணம், அதிக வட்டி வீதம் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்பட்ட தாறுமாறான உயர்வுதான் என மாருதி விளக்கம் அளித்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததும் முக்கிய காரணம் என்கிறார்கள். கடந்த வாரம்தான் மாருதி சுஸுகி தனது அனைத்து வகை கார்களுக்கும் 3 முதல் 4 சதவீதம் அளவு விலையை உயர்த்தியது. இதுவும் விற்பனை வீழ்ந்து, நிறுவனத்தின் நிகர லாபத்தை பாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications