உலக பொருளாதார மாநாட்டில் 110 பேர் கொண்ட இந்திய குழு!

உலக பொருளாதார அமைப்பின் ஆண்டு மாநாடு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் நடைபெறுகிறது.
வருகிற 25-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையில் 110 பேர் கொண்ட இந்திய பிரதிநிதி குழுவினர் பங்கேற்கிறார்கள்.
இந்த குழுவில், மத்திய திட்ட கமிஷன் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, சச்சின் பைலட் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் தரப்பில் பி.கோத்ரேஜ், கிரீஷ் கோபாலகிருஷ்ணன் (இன்போசிஸ்), ராகுல் பஜாஜ், முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல், அஜிம் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த மாநாட்டையொட்டி நடைபெறும் முக்கிய நாடுகளின் வர்த்தக மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்கும் ஆனந்த் சர்மா, 'தோஹாவுக்குப் பின்பு உலக வர்த்தகத்தின் வருங்காலம்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.


Click it and Unblock the Notifications
