சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ். மணியன் மரணம்
மதுரை: சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. பி. பி.எஸ். மணியன் (84) உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
மேலசின்னனம்பட்டியைச் சேர்ந்தவர் பி.எஸ். மணியன். அவர் கடந்த 1967ம் ஆண்டு சோழவந்தான் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார். 1974ம் ஆண்டில் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவராகவும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்தார். பின்னர் 1978ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். அடுத்து 1996ம் ஆண்டு மதிமுகவில் இணைந்தார்.
2006ம் ஆண்டில் மதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றார். அந்த ஆண்டே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அறிந்த திமுக தலைவர் கருணாநிதி அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த மணியன் நேற்று தனது சொந்த ஊரான மேலசின்னனம்பட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications