தலைமைச் செயலகத்தில் உலவும் 3 'ஒற்றர்கள்': 'அம்மா'வுக்கு தெரியுமா?

'வ, பெ மற்றும் அ' என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட இந்த மூன்று முக்கிய அதிகாரிகள்தான் பல முக்கியத் தகவல்களை வெளியில், அதாவது ஒரு முக்கிய கட்சியின் தலைமைக்கு லீக் செய்வதாகவும் கூறுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். இந்த மும்மூர்த்திகளில் இருவர் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று பேரும்தான், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பி.ஏக்கள், கார் டிரைவர்கள் உள்ளிட்டோரை நியமிக்கும் பொறுப்பில் இருப்பவர்களாம். இவர்கள் சொல்லும் நபர்கள்தான் பி.ஏக்களாகவோ அல்லது டிரைவர்களாகவோ ஆக முடியுமாம்.
எனவே ஒரு முக்கியக் கட்சி இந்த மூன்று பேரையும் தனக்கு சாதகமாக மடக்கியுள்ளதாம். இவர்கள் மூலம் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பி.ஏக்கள் மற்றும் டிரைவர்களாக அது முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ரகசியமாக நியமனம் செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலம் அரசின் அன்றாட நடவடிக்கைகள், அமைச்சர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளின் முக்கிய நடவடிக்கைளை அவர்கள் உளவு பார்த்துச் சொல்கிறார்களாம்.
இதனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து என்னென்ன தகவல் தெரியுமோ அது அத்தனையும் அந்தக் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கும் முன்கூட்டியே போய் விடுகிறதாம். பல முக்கியத் தகவல்களையும் முதல்வருக்கு முன்பாகவே அந்தக் கட்சியின் தலைமை வாங்கி விடுகிறதாம்.
அதை விட உளவுத்துறைக்குத் தகவல் கிடைப்பதற்கு முன்பே அந்த் கட்சியின் தலைமைக்குத் தகவல் போய் விடுகிறது என்கிறார்கள் கோட்டை தரப்பினர்.
முதல்வருக்கு வெகு அருகே இருந்தபடிதான் இந்த மூன்று உயர் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். ஆனால் இதுவரை இவர்கள் குறித்து முதல்வருக்குத் தெரியாமல் இருப்பது குறித்து தலைமைச் செயலக ஊழியர்கள் பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
'அம்மா'வுக்கு இவர்கள் குறித்துத் தெரியுமா அல்லது விட்டுப் பிடித்து, பின்னர் வேட்டையாடக் காத்துக் கொண்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை...
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications