பிஜி தீவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
வெலிங்டன்: தென் பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
தென் பிசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில் இன்று நண்பகல் 12.52 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் வழக்கத்தை விட கடல் அலைகள் அதிக உயரத்தில் எழுந்தன. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பிஜி தலைநகர் சுவாவுக்கு தெற்கே 472 மைல் தொலைவிலும், 362 மைல் ஆழத்திலும் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர் இழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஹாவாய் மற்றும் மெக்சிகோ பகுதிகளில் 5.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications