உபி தேர்தல்: பாஜகவின் 'ஒய் திஸ் ஊழல், ஒய் திஸ் ஊழல் ஜி'!
டெல்லி: உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, தனுஷின் கொலவெறி பாடல் வரிகளை மாற்றி ஊழலுக்கு எதிரான பாடலாகப் பயன்படுத்துகிறது.
3 படத்திற்காக தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் என்ன பாடல் என்றே புரியாவிட்டாலும் கூட எப்படியோ உலகப் புகழ் பெற்றுள்ளது. பாலிவுட் பிரலபலங்கள் முதல் அரசியல் கட்சிகளையும் அந்தப் பாடல் கவர்ந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்காக அம்மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.
இதில் பாஜக ஊழலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறது. அதற்காக கொலவெறிப் பாடல் வரிகளை மாற்றி அதே டியூனில் பயன்படுத்தி வருகிறது. 'ஒய் திஸ் ஊழல், ஒய் திஸ் ஊழல் ஜி' என்று அந்த பாடல் துவங்குகிறது. இது தவிர அந்த பாடலை படமாக்கி அதை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று அக்கட்சி நம்புகிறது.
பாஜகவின் கொலவெறிப் பாடலை அபீர் வாஜ்பாய் மற்றும் ருச்சி ஆகியோர் பாடியுள்ளனர். இது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரைத் தாக்கிப் பாடுவதாக உள்ளது.
சல்மான் கானின் தபாங் படத்தில் வந்த முன்னி பத்னாம் ஹுய் பாடல் வரிகளை மாற்றி மாயாவதியைத் தாக்கிப் பாடுவதாக அமைக்கவிருக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications