அதிகாரப்பூர்வ வயதை விட 5 வயது சிறியவர் மே. வங்க முதல்வர் மமதா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அவரது அதிகாரப்பூர்வ வயதைவிட 5 வயது சிறியவர் என்பது தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அண்மையில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். அதன்படி அவரது அதிகாரப்பூர்வ வயதான 57ஐ விட அவர் 5 வயது சிறியவர் என்பது தெரிய வந்துள்ளது. பள்ளிக் கல்வி தேர்வுக்காக அவரது தந்தை மமதாவின் வயதை 5 ஆண்டுகள் அதிகமாக்கி சான்றிதழ் பெற்றுள்ளாராம்.
இது குறித்து தனது சுயசரிதையில் மமதா கூறியிருப்பதாவது,
நான் பள்ளி இறுதித் தேர்வு எழுதியபோது எனக்கு 15 வயது கூட ஆகவில்லை. வயது குறைவாக இருந்ததால் எனது தந்தை கற்பனை வயது மற்றும் பிறந்த தேதி கொடுத்து புதிய சான்றிதழ் பெற்றுத் தந்தார். அதன் விளைவாக எனது நிஜ வயதை விட அதிகாரப்பூர்வ வயது 5 ஆண்டுகள் அதிகமாகும். தவறான பிறந்த தேதி உள்ள சான்றிதழ் தான் சட்டப்படி செல்லும் ஆவணமாக உள்ளது.
இந்நாள் வரை எனக்கு 2 பிறந்தநாள். எனது தாய் எனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அஷ்டமி அன்று கொண்டாடுவார். அதாவது துர்கா பூஜையின் 8வது நாள்(துர்கா பூஜை அக்டோபர் மாதத்தில் வருகிறது).
எனக்கு ஏன் பொய்யான பிறந்ததேதி கொடுக்கப்பட்டுள்ளது என்று எனது தாயிடம் கேட்டேன். அதற்கு அவர் நீயும், உனது சகோதரரும் மருத்துவமனையில் பிறக்கவில்லை. அதனால் பிறந்த வருடம், தேதி உள்ள பிறப்புச் சான்றிதழை எங்கு போய் வாங்குவது என்று கேட்டார் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மமதா அக்டோபர் 5ம் தேதி பிறந்திருக்கிறார். ஆனால் லோக்சபா இணையதளம் உள்பட அனைத்து அரசு ஆவணங்களிலும் ஜனவரி 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ராணுவத் தளபதிக்கு இந்த வயதுப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதேபோல மமதாவுக்கும் ஏதாவது சிக்கல் வருமா என்று தெரியவில்லை. இருப்பினும் இப்போதைக்கு காங்கிரஸ் மட்டும்தான் மமதாவின் ஒரே சிக்கல்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications