குற்றாலம்: கார் மரத்தில் மோதி அதிமுக எம்எல்ஏ மருமகன் உள்பட 3 பேர் பலி

நெல்லை மாவட்டம் புளியங்குடி நகராட்சி துணை தலைவராக இருந்தவர் டாக்டர் ரகுகுமரன். இவர் வாசுதேவநல்லூர் அதி்முக எம்எல்ஏ டாக்டர் துரையப்பாவின் மருமகன் ஆவார்.
ரகுகுமரன் தனது நண்பர்களான மதுரை எழில் நகரை சேர்ந்த டாக்டர் கார்த்திக், போடிநாயக்கனுரை சேர்ந்த டாக்டர் தினேஷ், ராஜபாளையம் பச்சையன்மடத்தை சேர்ந்த டாக்டர் ரகு ஆகியோருடன் தென்காசியில் இன்று நடைபெறும் நண்பரது திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு குற்றாலம் வந்தார்.
விடுதியில் தங்கியிருந்த அவர்கள் இன்று அதிகாலை பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக காரில் சென்றனர். உடன் வாசுதேவநல்லூரை சேர்ந்த சின்னசாமி என்பவரையும் அழைத்து சென்றனர். காரை நன்னகரத்தை சேர்ந்த வேலு மகன் இசக்கிமுத்து என்பவர் ஓட்டி சென்றார்.
சிறிது நேரத்தில் இசக்கி முத்துவிடம் இருந்து டாக்டர் ரகுகுமரன் காரை வாங்கி ஓட்டியுள்ளார். பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ள திருப்பத்தில் சென்றபோது கார் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மருதமரத்தில் பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே காரை ஓட்டி சென்ற டாக்டர் ரகுகுமரன், அவரது நண்பர் டாக்டர் கார்த்திக், சின்னசாமி ஆகிய 3 பேரும் பலியானார்கள்.
படுகாயமடைந்த டாக்டர் தினேஷ், ரகு, டிரைவர் இசக்கி முத்து ஆகிய 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் விபத்தில் பலியான டாக்டர் ரகுகுமரன் ராஜபாளையம் முன்னாள் திமுக எம்எல்ஏ தனுஷ்கோடியின மகன் ஆவார்.
ரகுகுமரனின் மாமியார் டாக்டர் அருள்மொழி தென்காசி சுகாதார பணிகள் இணை இயக்குநராக உள்ளார். இறந்தவர்கள் உடல் தென்காசி அரசு மருத்துவ்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
வாசுதேவநல்லூர் எம்எல்ஏ துரையப்பா-தென்காசி இணை இயக்குனர் டாக்டர் அருள்மொழி ஆகியோர் மருமகனான டாக்டர் ரகுகுமரனி்ன் உடலை பார்த்து கண் கலங்கினர்.
டாக்டர் ரகுகுமரனுக்கு டாக்டர் துரையபபாவின் மகள் சங்கரி என்பவருடன் 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மாதத்தில் கைக்குழந்தை உள்ளது. சங்கரி தனது தாய் அருள்மொழி புளியங்குடியில் நடத்தி வரும் கிளிக்கில் டாக்டராக உள்ளார்.
எம்எல்ஏ துரையப்பா மற்றும் புளியங்குடி நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தென்காசி அரசு மருத்துவமனை வாளகத்தில் குவிந்தனர். இச்சம்பவம் தென்காசி, புளியங்குடி பகுதியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications