உள்நோக்கத்துடன் வழக்கு போடும் அதிமுக அரசு: அன்புமணி
வரும் தேர்தலில் பாமக தலைமையில் வலுவான அணி அமையும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
மதுரையில் ஐந்து மாவட்டங்களுக்கான பாமக பொதுக்குழு கூட்டம் செல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,
டாக்டர் ராமதாஸ் மீது பொய் வழக்கு போடுவது கண்டிக்கத்தக்கது. அமைதியாக இருக்கும் எங்கள் மீது அதிமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் இதுபோல வழக்குகளில் அரசு கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதிமுக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடுத்துள்ளது. அமைச்சரின் தூண்டுதலின் பேரிலேயே காவல்துறை இந்த வழக்கை தொடுத்துள்ளது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். சட்டப்படி வழக்கை எதிர்கொள்வோம்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்தாததால் அந்த மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
கொலை, கொள்ளை என நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. வரும் தேர்தலில் பாமக தலைமையில் வலுவான அணி அமையும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications