ராமதாஸ் மீது புகார் கொடுத்த ஆசிரியருக்கு எதிராக மாணவர் பச்சைக் கவுண்டர் புகார்!
திண்டிவனம்: வன்னியர் கல்லூரி விவகாரம் பெரிதாகி வருகிறது. டாக்டர் ராமதாஸ் மீது போலீஸில் புகார் கொடுத்த கல்லூரியின் பேராசிரியர் மாயகிருஷ்ணன் மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்த நிலையில் தற்போது ஒரு மாணவரும் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பச்சைக் கவுண்டர் என்கிற அந்த மாணவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
டாக்டர் ராமதாஸுக்கு எதிராக புகார் கொடுத்த உதவிப் பேராசிரியர் மாயக்கிருஷ்ணன், கல்லூரி மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் பேசுவார்.
கட்டணம் செலுத்த வேண்டாம், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று கூறுவார். இதை எதிர்த்துக் கேட்டதால் என்னை கொலை செய்துவிடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மாணவர்களிடையே வன்முறையைத் தூண்டினார், தட்டிக் கேட்டபோது மிரட்டினார் என்று மாயகிருஷ்ணன் மீது ஏற்கனவே கல்லூரி அலுவலர் மாமல்லனும் ஒரு புகார் கொடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக மாயகிருஷ்ணன் ஒலக்கூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தன்னை டாக்டர் ராமதாஸ் தூண்டுதலின் பேரில் கல்லூரி இயக்குநர் ஹரிகிருஷ்ணன் அவரது உதவியாளர் வெங்கடேசன் தாக்கினர் என்று கூறியிருந்தார். இதன் பேரில் ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மாறி மாறி புகார்களாக வந்தவண்ணம் உள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications