பழம்பெரும் திமுக தலைவர் ரத்தினவேல் செட்டியார் வீட்டிற்கு செல்லும் மு.க.ஸ்டாலின்
கரூர்: பழம்பெரும் திமுக தலைவர்களில் ஒருவரான கரூர் ரத்தினவேல் வீட்டிற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செல்லவிருக்கிறார்.
திமுக ஆரம்பித்த காலகட்டங்களில் கரூர் மாவட்ட பகுதிகளில் அக்கட்சியை அரும்பாடுபட்டு வளர்த்தவர் ரத்தினவேல் செட்டியார். இதனால் இந்த பகுதி திமுக மூத்த தலைவர்களிடமும், அக்கட்சியின் தலைவர் கருணாநிதியிடமும் பெரும் மதிப்பு பெற்றவர்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திமுக தலைமைக் கழகத்தில் இருந்து மூத்த தலைவர்கள் வந்து ஆஞ்சலி செலுத்துவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.
இந்நிலையில் அவர் இறந்து பல நாட்கள் ஆனபிறகு வேலாயுதம்பாளயத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்று அஞ்சலி செலுத்தவிருக்கிறார். மேலும் ரத்தினவேல் செட்டியார் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறுகின்றார்.












Click it and Unblock the Notifications