For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ 80000 கூடுதல் வரி விதிக்க யோசனை: டீசல் கார்கள் விலை உயருமா?

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: டீசல் வாகனங்களின் விலை விரைவில் விர்ரென அதிகரிக்க உள்ளது.

பட்ஜெட்டில் டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக ரூ80 ஆயிரம் வரி விதிக்க நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு பெட்ரோலிய அமைச்சகம் பரிந்துரை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக முகர்ஜியை பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது இறக்குமதி செய்யும் எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயுவை கப்பல்களிலிருந்து இறக்க விதிக்கப்படும் 5 சதவீத வரியை விலகக் கோருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க ஏற்கெனவே கனரக வாகன தொழில் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பால் ரெட்டியின் யோசனையை நிதி அமைச்சகம் ஏற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமானால் டீசல் வாகனங்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துவிடும்.

English summary
If S Jaipal Reddy has his way, diesel car prices would rise substantially shortly. The oil minister on Friday formally proposed to finance minister Pranab Mukherjee to slap an additional excise duty of Rs 80,000 on diesel vehicles in the Union Budget, a move that is bound to be opposed by the automotive industry and the department of heavy industries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X