ராகுல் பிரதமராகட்டும், அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து விடுவோம்-பாஜக
லக்னோ: இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளன. இந்தக் காலத்திற்கு ராகுல் காந்தி பிரதமராக இருக்கட்டும். அப்போதுதான் அவரது திறமையை இந்த நாடு அறிந்து கொள்ள முடியும். நாட்டின் பிரச்சினைகள் குறித்த அவரது அறிவு என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று சவால் விட்டுப் பேசியுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.
இதுகுறித்து லக்னோவில் அவர் பேசுகையில், ராகுல் காந்தி பிரதமராகட்டும். அதையும்தான் பார்த்து விடுவோம். இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளன. அவரது திறமை என்ன என்பதை இந்த நாட்டு மக்கள் பார்க்கட்டும், உணரட்டும். நாட்டின் பிரச்சினைகளை அவர் எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார் என்பதையும் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
ராகுல் பிரதமராக பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை, சிரமப்பட வேண்டியதில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கைப் பதவி விலகச் சொன்னால் போதும் என்றார் பிரசாத்.
பிரசாத்தின் இந்த சவாலுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், உண்மையை அவர்கள் இப்போதாவது ஒத்துக் கொண்டுள்ளார்களே அதற்காகப் பாராட்ட வேண்டும். 2014ல் காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறது. உ.பியில் இந்த ஆண்டே வரப் போகிறது. இதுதான் உண்மை. இதை மாற்றவோ, நிறுத்தவோ முடியாது.
காங்கிரஸிடம் பாஜக சரணடைந்ததையே பிரசாத்தின் பேச்சு காட்டுகிறது. அதை விட முக்கியம், அவர்கள் பேசுவதை நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதுதான் என்றார் சிங்வி.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications