உபியில் ராகுல் காந்தியின் பாச்சா பலிக்காது: பர்தன் பேச்சு
பாட்னா: உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் பேச்சால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தன் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை 7 கட்டங்களாக உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதயைடுத்து ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ராகுலின் பேச்சு எடுபடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி. பர்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உத்தர பிரதேசத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்தால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் 1 முதல் 4 இடங்களில் கூடுதலாக வெற்றி பெறலாம். தேர்தலில் 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடிக்கத் தான் காங்கிரஸும், பாஜகவும் போட்டு போடுகின்றன.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்திருப்பதால் அது மக்களுக்கு நல்ல மாற்றாக அமையும். கம்யூனிஸ்ட் கட்சி சில இடங்களைக் கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications