கூடங்குளம் பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம்: இந்து முன்னணி தாக்கு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக இநது முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி கட்சியின் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் நெல்லை கலெக்டர் செல்வராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கதிரியக்கத்தை காரணம் காட்டி மக்களை போராட்ட குழுவினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு தொழில் அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறந்து மின்உற்பத்தியை துவங்க ஆதரவு அளித்து வரும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு அஞ்சி திட்டத்தை நிறுத்தி வைப்பது மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தை காட்டுகிறது. பல்வறு போராட்டங்களை ஒடுக்கிய தமிழக அரசு கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
செவிலிய மாணவ, மாணவிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் தமிழக அரசு அனுமதியின்றி நடக்கும் கூடங்குளம் போராட்டத்தில் மென்மையாக நடந்து கொள்வது ஏன், அணுமின் நிலைய விவகாரத்தை வைத்து மத்திய அரசை அரசியல் ரீதியாக நிர்பந்திக்க தமிழக அரசு முயல்வதாக ஐயம் எழுந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகத் தெரிகிறது. இரண்டு, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களை கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யும் தமிழக அரசு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை உலவ விடுவதன் காரணம் என்ன? எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை உடனே துவங்க வேண்டும். 140 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications