விஜயகாந்த் என்ற பலூன் உயரப் பறக்க ஜெ. கொடுத்த காற்றுதான் காரணம்- அதிமுக எம்.எல்.ஏ
ன்னை: அரசியல் வானில் பல வண்ணங்களில் பலூன்கள் உயரே பறந்து கொண்டிருக்கின்றன. இந்த பலூன்களுக்கு உருவத்தையும், பறக்கின்ற உயரத்தையும் கொடுத்தது உள்ளே இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு என்ற காற்றாகும். அந்த அடிப்படை காற்றை அலட்சியப்படுத்தினால் உங்கள் நிலை என்னவாகும்? என்பதை பலூன்கள் உணரவேண்டும். உயரம் குறைந்து, உருக்குலைந்து, உருவம் மறைந்து, கிழிந்து குப்பை மேட்டில் குவிந்து கிடப்பீர்கள் என்று விஜயகாந்த்தை சாடியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ விஜய பாஸ்கர்.
சட்டசபையில் நேற்று விஜய பாஸ்கர் பேசுகையில்,
ஒற்றை உறுப்பினர் கட்சியாக பிறந்து, இன்றைக்கு 29 பேருடன் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை முதல்வர் ஜெயலலிதாவின் தயவால் எட்டியிருக்கின்ற கட்சியினுடைய தலைவர் பேரவைக்கு வந்த கவர்னர் தான் புதியவர், உரை பழையது என கூறியிருக்கிறார்.
வறுமையை ஒழிக்க ஒவ்வொரு குடும்பத்தையும் அடிப்படையாக கொண்டு திட்டங்களை செயல்படுத்தும் புதிய அணுகுமுறை, நகர்ப்புற வறுமை நிலையை போக்க ஒருங்கிணைந்த திட்டம் வரவு-செலவு திட்டத்தில் அறிவிக்கப்படும் என்ற உன்னத அறிவிப்பு இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் படிக்கவில்லை என்பதோ, படித்திருந்தும் நினைவில் நிறுத்த முடியவில்லை என்பதோ எனக்கு வியப்பை தரவில்லை. ஏனென்றால் தேர்தல் களத்தில் சொந்த வேட்பாளர் பெயரை கூட மறந்து போனவரல்லவா நம் எதிர்க்கட்சித் தலைவர்.
திருவிழாக் காலங்களில் பல திடீர் கடைகள் முளைக்கும். அந்த திடீர் கடையில் பஞ்சு மிட்டாயும் கிடைக்கும். பல வண்ண பலூன்களும் கிடைக்கும்.
அந்த வண்ண பலூன்கள் வானிலே பறக்கும். அதனைப் பார்க்க பரவசமாக இருக்கும். குழந்தைகளிடம் கைதட்டும் கிடைக்கும். தன் உருவத்திற்கும், பறக்கும் உயரத்திற்கும் காரணம் உள்ளே இருக்கும் காற்று என்பதை மறந்து அவை கர்வம் கொண்டதாம்.
அப்படித்தான் இன்றைக்கு அரசியல் வானில் பல வண்ணங்களில் பலூன்கள் உயரே பறந்து கொண்டிருக்கின்றன. இந்த பலூன்களுக்கு உருவத்தையும், பறக்கின்ற உயரத்தையும் கொடுத்தது உள்ளே இருக்கும் முதல்வரின் ஆதரவு என்ற காற்றாகும்.
அந்த அடிப்படை காற்றை அலட்சியப்படுத்தினால் உங்கள் நிலை என்னவாகும்? என்பதை பலூன்கள் உணரவேண்டும். உயரம் குறைந்து, உருக்குலைந்து, உருவம் மறைந்து, கிழிந்து குப்பை மேட்டில் குவிந்து கிடப்பீர்கள் என்றார் விஜயபாஸ்கர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications