லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது, மினி லாரி மோதியதால் இருவர் பரிதாபமாக பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 20 பேர், தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை அருகே சென்று கொண்டிருந்த போது, பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற மினி லாரி, அவர்கள் மீது மோதியது. இதில், கார்மேகம் என்பவரது மனைவி செல்வி (30), முத்துராஜ் என்பவர் மனைவி லட்சுமி(53), ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், இந்த விபத்தில் வேலுச்சாமி என்பவர் மனைவி அழகம்மாள் (40), மருதன் என்பவர் மனைவி லட்சுமி (28) ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கு காரணமான மினிலாரி டிரைவரை, போலீசார் தேடிவருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications