For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சேவுக்கு என்னாச்சு?... சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக விரைகிறார்!

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: ராஜபக்சே சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் என்றும், தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெறவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்தனா செய்து வருகிறார். ராஜபக்சேவுடன் செல்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸு்ககு நெருக்கமான வர்த்தகர் ஒருவர் செய்து கொடுக்கிறாராம்.

முதலில் ராஜபக்சே அமெரிக்காவில் தான் சிகிச்சை பெறுவதாக இருந்தது. ஆனால் போர்க்குற்றம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் எதற்கு வம்பு என்று நினைத்து சிங்கப்பூர் செல்கிறார்.

இதற்கிடையே அவர் வரும் 9ம் தேதி பாகிஸ்தானுக்கும் செல்கிறார். அவர் அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த எலிசபெத் மருத்துவமனையானது சிறுநீரக சிகிச்சைகளுக்குப் புகழ் பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இங்குதான் சென்று சிகிச்சை எடுத்துத் திரும்பினார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Sri Lankan president Rajapakse is going to take treatment at Mount Elizabeth hospital in Singapore. In the mean while, he is visiting Pakistan on february 9 and will be there for 2 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X