உபி: காங்கிரஸின் நடிகை வேட்பாளரைத் தாக்கிய ஆளுங்கட்சியினர்- புகார் வாங்க மறுத்த போலீஸ்

போஜ்பூரி நடிகை காஜல் நிஷாத் காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் கோரக்பூரில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 4ம் தேதி இரவு கக்ரகோரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராம் புலாவன் நிஷாத்தின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த இரும்புக் கம்பிகள், லத்திகள் மற்றும் கற்களால் காஜலைத் தாக்கினர். அப்போது காஜல் அருகே தான் ராம் புலாவன் நின்று கொண்டிருந்தார்.
காஜலைத் தாக்கிவிட்டு புலாவன் உள்பட அனைவரும் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர். இதில் காஜலுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு விட்டது. காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினார். அவரைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி சஞ்ஜய் குமார் தெரிவித்த பிறகே தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
இது குறித்து காஜல் கூறியதாவது,
போலீசார் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆளுங்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் என்னைத் தாக்கியது குறித்து பேலிபார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்கக் கூடத் தயாராக இல்லை. ஒரே இடத்தில் இரண்டு கட்சியினரும் கூட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்றார்.
ராம் புலாவன் கூறுகையில், நான் மகாவீர் சாப்ராவை அடைந்தபோது காஜலின் ஆதரவாளர்கள் தான் எங்களைத் தாக்கினர். நாங்கள் அங்கிருந்து அமைதியாகப் புறப்படவே விரும்பினோம் என்றார்.
இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த காஜலின் பிரச்சராக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அவர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகின்றது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications