இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடிசூட்டி 60 ஆண்டுகள் நிறைவு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ராணி விக்டோரியாவுக்கு அடுத்தபடியாக நீண்டகாலமாக ராணியாக இருப்பவர் எலிசபெத் ஆகும்.

எலிசபெத் இங்கிலாந்து ராணியாக முடிசூட்டி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை இன்று அவர் எளிமையான முறையில் கொண்டாடுகிறார்.

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள நார்போக்கில் தனது வழக்கமான பணிகளைச் செய்வார். மேலும் ஒரு டவுன் ஹாலுக்கும், ஜூனியர் பள்ளிக்கும் செல்கிறார். லண்டன் டவர் மற்றும் ஹைட் பூங்காவில் துப்பாக்கி குண்டுகள் முழங்கப்படும். மேலும் 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (www.thediamondjubilee.org) ராணி மற்றும் அவரது கணவர் பிலிப்பின் 2 புகைப்படங்கள் வெளியிடப்படும்.

வரும் ஜூன் மாதம் 4 நாட்கள் ஆடம்பரக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அப்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் கொண்டாட்டம் மற்றும் தேம்ஸ் நதியில் 1,000 கப்பல்கள் விடப்படுகிறது.

எலிசபெத் கடந்த 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி தனது தந்தை நான்காம் ஜார்ஜ் மறைவிக்குப் பிறகு இங்கிலாந்தின் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். அவரது ஆட்சியில் ராஜ பரம்பரை ஏற்றமும், இறக்கமும் கண்டுள்ளது. ராணியின் மகன் இளவரசர் சார்லஸின் முன்னாள் மனைவி டயானா இறந்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு டயானாவின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் தனது நீண்ட நாள் காதலி கேட் மிடில்டன்னை மணந்தது உலகையே கவர்ந்தது.

85 வயதாகும் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்புக்கு வயது 90 ஆகும். அண்மையில் தான் அவருக்கு இதயக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிலிப் மகா குறும்புக்காரர், அடிக்கடி வம்புகளை இழுத்துக் கொண்டு வந்து விடுவார் என்பது குறிப்படித்தக்கது.

இந்நிலையில் பிபிசி டிவியில் ஒளிபரப்பான குறும்படத்தில் டயானாவின் இளைய மகன் இளவரசர் ஹாரி, இளவரசர் பிலிப் இல்லாமல் ராணியால் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ராணி எலிசபெத்தின் பதவிக்காலத்தில் இங்கிலாந்தில் இதுவரை 12 பிரதமர்கள் மாறியுள்ளனர், அமெரிக்காவில் 12 அதிபர்கள் மாறியுள்ளனர் மற்றும் 6 போப் ஆண்டவர்கள் மாறியுள்ளனர். அவர் இதுவரை 116 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக இங்கிலாந்து மக்கள் தனக்கு அளித்து வரும் ஆதரவுக்கு எலிசபெத் நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+