For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது: என்.டி.ஆர். மனைவி ஆரூடம்!

By Siva
Google Oneindia Tamil News

Lakshmi Parvathi
திருப்பதி: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் காலத்தில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புள்ளதாக மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் 2வது மனைவியும், என்.டி.ஆர். தெலுங்கு தேச கட்சித் தலைவருமான லட்சுமி சிவபார்வதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வரும் 2014ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சமாதிகட்டுவார்கள். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்குவதென்று மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

என்.டி. ராமராவ், ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக்காலம் ஆந்திர மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அப்பேர்பட்ட ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவின் மூலம் ஆட்சியைப் பிடிக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்கின்றார். அது ஒருபோதும் நடக்காது. ஏனென்றால் மக்கள் பாலகிருஷ்ணாவை என்.டி.ஆரின் கலைவாரிசாக நினைக்கிறார்களே தவிர அரசியல் வாரிசாகக் கருதவில்லை. மேலும் பாலகிருஷ்ணாவின் செல்வாக்கு தான் 2009ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலேயே தெரிந்துவிட்டதே.

நடிகர் சிரஞ்சீவி முதல்வராக வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார். பதவிக்கு குறிவைத்து வந்த அவர் தனது லட்சியம் நிறைவேறாததால் பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸை வைத்து முதல்வராகிவிடலாம் என்று நினைக்கின்றார்.

நிஜமாகவே மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தால் தமிழகத்தின் விஜயகாந்திடம் அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கட்சி துவங்கிய விஜயகாந்த் முதல் சட்டசபை தேர்தலில் தான் மட்டும் வெற்றி பெற்றார். மக்கள் சேவையாற்றியதன் பயனாக அடுத்த தேர்தலில் அவரது கட்சியைச் சேர்ந்த 29 பேர் வெற்றி பெற்றனர். வருங்காலத்தில் அவர் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு படிப்படியாக முன்னேறும் அவரைப் பார்த்து சிரஞ்சீவி பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்றார்.

English summary
NTR's wife cum NTR Telugu desam party chief Lakshmi Parvathi has told that Vijayakanth grows day by day in politics. Chances are there for him to become the CM of Tamil Nadu. Chiranjeevi should learn lessons from him, she added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X