மிரட்டும் மின்வெட்டு : கோவையில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்
கோவை : தொடர் மின்வெட்டை கண்டித்து கோயம்புத்தூர் தொழிற்சாலைகளில் மூன்று நாட்கள் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. இதனால், சுமார் 3 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, மின்வெட்டை கண்டித்து தொழில் வர்த்தக அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கறுப்புக்கொடி போராட்டம்
அங்கு சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் புதன்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்ற தொழில் முனைவோர், கோவையில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும் கருப்புக்கொடிகளை ஏற்றினர். தமிழக அரசைக் கண்டித்து புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருக்கும் என்று தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக மண்டல அலுவலகத்தை தொழில் துறையினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு உள்பட அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது தொழில் அமைப்பினர், ‘மின்சாரம் இல்லாமல் எப்படி தொழிற்சாலை நடத்துவது, சென்னைக்கு ஒரு நியாயம், கோவைக்கு ஒரு நியாயமா, என்று கேள்வி எழுப்பினர்.
மின்சார விடுமுறை
அப்போது தொழில் அமைப்பினரிடம், பேசிய மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு, ‘தமிழகத்தில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை இருக்கிறது. கோடை காலத்தில் அதிகளவு மின்சாரம் செலவாகிறது. எனவே, வாரம் 2 நாள் மின் விடுமுறை விட அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். முறையற்ற மின் தடை நேரத்தை ஒழுங்குபடுத்தி, முறையான மின்தடை நேரத்தை அமலாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 1 மணி நேரம் மட்டுமே மின் தடை உள்ளது. கோவையில் 6 மணி நேரத்திற்கு அதிகமாக மின் தடை இருக்கிறது. இந்த வேறுபாட்டை களைய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications