சோனியா குடும்பத்தில் பிளவு- உமாபாரதிக்கு
லக்னெள: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உமாபாரதி கூறியுள்ளதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு தமது குழந்தைகளை ஊடகங்கள் படம்பிடித்து வெளியிட்டதற்காக புலம்பியவர் பிரியங்கா காந்தி.
அப்போது நீதிமன்றத்தில் வழக்குப் போட்ட இப்போது உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் 2 குழந்தைகளையும் மேடையேற்றி ஓட்டுப் பிச்சை எடுக்க வைக்கிறார்.
இன்னொருபுறம் அவரது கணவர் ராபர்ட் வதேராவோ, தாம் அரசியலுக்கு வரப்போவதாக சொல்கிறார். மறுநாளே பிரியங்கா இதனை மறுத்துவிடுகிறார்.
இவையெல்லாமே சோனியா குடும்பத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது.
உத்தரப்பிரதேசத்திலிருந்து வெளிமாநிலங்களில் பணிபுரிவோரை பிச்சைக்காரர்கள் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டிருந்தார். கடும் உழைப்பாளிகளுக்கும் பிச்சைக்காரகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல்காந்தி.
ரேபரேலியில் தமது குழந்தைகளுடன் வாக்குசேகரித்தாரே பிரியங்கா, அதுதான் பிச்சை எடுப்பது என்பது.
சோனியா காந்தி குடும்பத்தினர் இன்னமும் தங்களை மன்னர்களாக, இந்த நாட்டை ஆளப் பிறந்தவர்களாகவே கருதுகின்றனர். ஜனநாயக நாட்டில் இத்தகைய கடவுளர்கள் இருக்க முடியாது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் தீர்மானிக்கக் கூடிய வலிமை படைத்தவர்கள்.
அவசரநிலை பிரகடனத்துக்குப் பிறகு பிரியங்காவின் பாட்டி இந்திராவையே மக்கள் தூக்கி எறிந்தத வரலாறை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தலித்துகளின் வீடுகளில் ராகுல்காந்தி சாப்பிடுவதாக, அமர்வதாக சொல்கிறார். இதனாலேயே ராமராஜ்யம் அமைந்துவிட்டாது.
என்னை மத்திய பிரதேச்த்திலிருந்து வந்த வெளிமாநிலத்தவர் என்கின்றனர். அப்படியானால் மோதிலால் நேரு ஜம்மு காஷ்மீரத்திலிருந்து வந்து உத்தரப்பிரதேசத்தில் குடியேறியவர்தானே? சோனியாவும் இத்தாலியிலிருந்து வந்தவர்தானே! அவர்களை மக்கள் ஏற்கத்தானே செய்தனர், என்றார் அவர்.












Click it and Unblock the Notifications