தமிழர் அதிகம் வாழும் தேவி குளம் இனி 'தேவி கொலம்'!

கேரளாவில் 17, பஞ்சாபில் 4, ஒரிசாவில் 2, மத்திய பிரதேசத்தில் 2 நகரங்களின் பெயர்கள் மாறுகின்றன.
கேரளாவின் திருச்சூர் ஆங்கிலத்தில் Trichur என எழுதப்படுகிறது. இது தற்போது Thrissur என மாற்றமாகிறது.
இதேபோல் Quilon என்ற கொல்லம் இனி ஆங்கிலத்திலும் Kollam என்றே எழுதப்படும்.
Alleppey என்ற ஆழப்புழை இனிமேல் Alappuzha! Palghat என்று எழுதப்படும் பாலக்காடு Palakkad என்றே எழுதப்படும்.
இதே போல் தமிழர்கள் அதிகம் வாழும் தேவி குளம் தற்போது Devi Colam என எழுதப்படுகிறது. இது இனி Devi Kulam !
மத்திய பிரதேசத்தில் கொடேகான் நகரம் இனி ஸ்ரீதாம் என்றும் மோவ் நகரம் அம்பேத்கர் நகரம் என்றும் அழைக்கப்படும்.
ஒரிசாவின் பெளத் கந்தமாலல் இனி சுபர்னபூர் எனப்படும்.
போபாலுக்கு மறுப்பு
மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பெயரை போஜ்பால் என மாற்றம் செய்ய வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications