காதலர் தினக் கொண்டாடங்களில் அசிங்கம் கூடாது..எச்சரிக்கும் இந்து முன்னணி
சென்னை: காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் அநாகரீகமாகவும், அசிங்கமாகவும் நடந்து கொள்வோரைத் தடுத்து நிறுத்தப் போவதாக இந்து முன்னணி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'விடிந்தால்' காதலர் தினம். இதையடுத்து 'கலாச்சாரத்தைப்' பாதுகாக்க கிளம்பி விட்டன இந்து முன்னணி உள்ளிட்ட 'மாரல் போலீஸ்' படையினர். காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தயாராகி வருவோருக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
காதல் என்ற பெயரில் சமூக ஒழுக்கங்களைச் சீர்குலைக்கும் கயவர்களை இந்து முன்னணி எச்சரிக்கிறது. புனிதமான கோயில்களில், ஜோடியாக வந்து களங்கப்படுத்தும் முயற்சியை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில், பொது இடங்களில் அநாகரீகமாக, அசிங்கமாக நடந்து கொள்பவர்களை இந்து முன்னணி தடுத்து நிறுத்தும்.
கல்யாணம் பண்ணி வைப்போம்
உண்மையான காதலர்களுக்குப் பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைக்கவும் இந்து முன்னணி தொண்டர்கள் விழிப்புடன் செயல்படுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அரசும், காவல்துறையும் காதலர் தினம்' என்ற பெயரில் அநாகரீகக் கூத்தடிப்பதைத் தடுக்க வேண்டும். சட்டம் என்பது வருமுன் காப்பதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்களைக் காத்திடவும் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் முருகானந்தம்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications