நத்தம் போலீசாரின் பொய்யான வழக்கை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட்டில் குஷ்பு மனு

கடந்த சட்டசபை தேர்தலின்போது நடிகை குஷ்பு திமுக வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். நத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட விஜயனை ஆதரி்தது அப்பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி நத்தம் போலீசார் குஷ்பு மற்றும் திமுக வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நத்தம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் நடந்த விசாரணையின்போது நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து அங்கிருந்து காரில் சென்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் குஷ்புவும், விஜயனும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நத்தம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் விதியை மீறியதாக எங்கள் மீது நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான புகாரின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications