+2 தனித்தேர்வர்களுக்கான டிக்கெட் நாளை முதல் வினியோகம்
சென்னை: வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள +2 தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுபவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
வரும் மார்ச் மாதம் +2 தேர்வு நடைபெற உள்ளது. இதில் லட்சக் கணக்கான பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். மேலும் தனித் தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது,
தனித் தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள் குறிப்பிட்டுள்ள தேர்விடத்தின் அருகே உள்ள தேர்வு மையத்தில் பெயர் பதிவாகி உள்ளது. அங்கு அவர்கள் ஹால் டிக்கெட்டுகளை நாளை முதல் பெற்றுக் கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் கிடைத்தவுடன் அதில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாட விபரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்பதை சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும். ஹால் டிக்கெட்டில் உள்ள விபரங்களில் பிழை மற்றும் மாற்றம் இருந்தால் உடனடியாக அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் உள்ள கூடுதல் செயலாளரை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அணுகலாம்.
மேலும் ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கூடுதல் செயலாளரை அணுகலாம். செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், கண்டிப்பாக அதை மீண்டும் எழுதி எழுத்து தேர்விலும் பங்கேற்க வேண்டும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications