சங்கரன்கோவில் ஹவுஸ் ஓனர்களுக்கு 'யோகம்'-கட்சிகள் வீடு வேட்டையால் வாடகை உயர்வு!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் பகுதியில் அரசியல் கட்சியினர், தங்கியிருந்து பிரசாரம் செய்வதற்கு வாடகைக்கு வீடு தேடி வருவதால் வீட்டு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாம்.
இடைத்தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தென் மண்டல பொறுப்பாளர் அழகிரியும் சங்கரன்கோவிலில் தங்கி தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி அறிவிக்கப்பட்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த பவுர்ணமி நாளில் பிரச்சாரத்தை துவக்கிய வேட்பாளர் முத்துசெல்வி குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இடைத்தேர்தல் பணிக்கு செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி 'பிள்ளையார் சுழி' போட்ட மதிமுகவும் தேர்தல் அலுவலகத்தை திறந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது.
திமுகவும் விரைவில் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது. இந்நிலையில் சங்கரன்கோவிலுக்கு வந்த திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கட்சியின் துணை பொது செயலாளர் ஸ்டாலின், தென்மண்டல பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்க இருக்கும் வீட்டை பார்த்தார்.
இதில் ஸ்டாலின் சங்கரன்கோவிலில் தங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அழகிரி வாசுதேவநல்லூரில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரது வீட்டில் தங்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு ஏற்பாடு செய்வதில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து சங்கரன்கோவில் தொகுதியில் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. தொகுதியில் வாடகைக்கு வீடு பிடிப்பதில் திமுக மற்றும் அதிமுக ஆர்வம் காட்டி வரும் நிலையில் மதிமுக மற்றும் தேமுதிக எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகள் வீடு தேடி அலைவதால் சங்கரன்கோவிலில் நல்ல வீடாக வைத்துள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி வைத்து கரை வேட்டிகைளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications