தேர்தல் பிரசாரத்தின்போது பேப்பரைக் கிழித்தெறிந்து டென்ஷனாக பேசிய ராகுல் காந்தி
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மக்களுக்குத் தருவதாக கூறிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, கையில் இருந்த பேப்பரைக் கிழித்தெறிந்து கோபமாக பேசியதால் பிரசாரக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கோபாவேசமாக பேசினாலும் கூட பொறுமை இழக்காதவர் ராகுல் காந்தி. ஆனால் நேற்று உ.பி. மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அவர் கையில் இருந்த பேப்பரைக் கிழித்தெறிந்து டென்ஷனானது காங்கிரஸாரையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
லக்னோவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடிக் கட்சியும் மக்களுக்கு வெற்று வாக்குறுதிகளை மட்டுமே தருகின்றன. மின்சாரம் தருவோம், குடிநீர் தருவோம், வேலைவாய்ப்பு தருவோம் என்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வெற்று வாக்குறுதிகளே, வேலைக்கு ஆகாத வாக்குறுதிகள் என்று கூறிய அவர் கையில் இருந்த பேப்பரை எடுத்து டார் டாராக கிழித்தெறிந்தார்.
பின்னர் அவர் தொடர்ந்து பேசுகையில், நான் ஏன் பேப்பரைக் கிழித்துப் போட்டேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா. அவர்களது வாக்குறுதிகள் எங்கு போக வேண்டும் என்பதைத்தான் இவ்வாறு செய்து காட்டினேன்.
ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிக் கொள்வோர் கர்நாடகத்திலும், உ.பி.யிலும் நடைபெறும் ஊழல்களை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள் என்றார் ராகுல்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications